தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள்
தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும், அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது.
⇨
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 17 நல வாரியங்கள்
⇨தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்
⇨தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம்.
⇨தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம்,
⇨தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் நல வாரியம்
⇨தமிழ்நாடு முடித்திருத்துவோர் நல வாரியம்.
⇨தமிழ்நாடு தையல் தொழிலாளர்கள் நல வாரியம்
⇨தமிழ்நாடு கைவினைத் தொழிலாளர்கள் நல வாரியம்
⇨தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம்.
⇨தமிழ்நாடு கைத்தறி மற்றும் கைத்தறிப்பட்டு நெய்யும்
⇨தொழிலாளர்கள் நல வாரியம்.
⇨தமிழ்நாடு ஓவியர் நல வாரியம்
⇨தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
⇨தமிழ்நாடு பொற்கொல்லர் நல வாரியம்
⇨தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நல வாரியம்.
⇨தமிழ்நாடு வீட்டுப்பணியாளர்கள் நல வாரியம்.
⇨தமிழ்நாடு விசைத்தறி நெசவாளர்கள் நல வாரியம்
⇨தமிழ்நாடு பாதையோர வணிகர்கள் மற்றும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் நல வாரியம்,
⇨தமிழ்நாடு சமையல் தொழிலாளர்கள் நல வாரியம்.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் 30.11.1994 அன்று அரசால் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாரிய நலத்திட்டத்தின் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொழில் இனங்கள் ஆகிய 53 வகையான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.